• Sep 30 2023

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த காவலன் திரைப்பட இயக்குநர் உயிரிழப்பு- இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்

stella / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குநர் சித்திக், 1986 ஆம் ஆண்டு 'பாப்பன் பிரியப்பேட்டை பாப்பன் ' என்கிற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே தன்னுடைய வித்தியாசமான கதை களத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இதை தொடர்ந்து மோகன்லாலை வைத்து 'நாடோடிக்காட்டு' என்கிற படத்தை இயக்கினார். 

அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் மலையாள திரையுலக முன்னணி நடிகர்களின் ஃபேவரைட் இயக்குநராகவும் மாறினார்.இவர் தமிழில் தளபதி விஜய்யை வைத்து, பிரெண்ட்ஸ் மற்றும் காவலன் படத்தை இயக்கினார். அதே போல் விஜயகாந்த் - பிரபு தேவா நடிப்பில் வெளியான, சூப்பர் ஹிட் படமான 'எங்கள் அண்ணா' படத்தை இயக்கினார். 


கடைசியாக தமிழில் அரவிந்த் சாமியை வைத்து 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படத்தை இயக்கி இருந்தார். அதே போல் மலையாளத்தில் 2020 ஆம் ஆண்டு மோகன் லால் நடிப்பில் வெளியான 'பிக் பிரதர்' படத்தை இயக்கிய நிலையில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.


இந்த நிலையில் இவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement