• Jan 19 2025

மிஸ்டர் மனைவி’ சீரியலில் இருந்து ஷபானா வெளியேறினாரா? சன் டிவி வெளியேற்றியதா? அதிர்ச்சி தகவல்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

’செம்பருத்தி’  சீரியல் மிகப்பெரிய ஹிட் ஆனதால் தான் அந்த சீரியல் நாயகி ஷபானாவை, ‘மிஸ்டர் மனைவி’ என்ற சீரியலுக்காக சன் டிவி ஒப்பந்தம் செய்தது. ஆரம்பத்தில் இந்த சீரியல் ஓரளவு நன்றாக சென்று கொண்டிருந்தாலும் போகப்போக எதிர்பார்த்த ரிசல்ட் வரவில்லை என்பதால் சன் டிவி அதிருப்தியில் இருந்ததாக  கூறப்பட்டது.

இந்த நிலையில் தான் சீரியல் ஒளிபரப்பாகும் நேரத்தை மாற்ற சன் டிவி முடிவு செய்ததாகவும், ஆனால் நேரத்தை மாற்றினால் நான் இந்த சீரியலில் இருந்து வெளியேறி விடுவேன் என்று ஷபானா கூறியதாகவும் இதனால் சன் டிவி மற்றும் ஷபானா மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தான் தொடர்ந்து ரேட்டிங்கில் முன்னேற்றம் இல்லாததால் இந்த சீரியலை முடித்து விடலாம் என்று கூட சன் டிவி யோசித்ததாகவும், இதனை தெரிந்து கொண்ட ஷபானா இந்த சீரியல் இருந்து விலகி விடுவது தான் நமக்கு மரியாதை என்று திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில் திடீரென ’மிஸ்டர் மனைவி’ சீரியலில் இருந்து விலகுவதாக சன் டிவிக்கு எந்தவித முன் தகவலும் தெரிவிக்காமல் ஷபானா இன்ஸ்டாவில் அறிவித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தான் சன் டிவி இதை ஒரு மானப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு சீரியலை தொடர முடிவு செய்தது.

தற்போது ஷபானாவுக்கு பதிலாக அஞ்சலி கேரக்டரில் தேப்ஜானி மோடக் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் கதையை கொஞ்சம் விறுவிறுப்பாக்க இயக்குனர் இடம் சன் டிவி கூறியுள்ளதாகவும் மீண்டும் நல்ல ரேட்டிங்கில் இந்த சீரியலை கொண்டு வர அனைத்து திட்டமும் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் சன் டிவி இந்த சீரியலை முடித்துவிடலாம் அல்லது ஷபானாவை வெளியேற்றிவிடலாம் என்று திட்டமிட்டிருந்த நிலையில் ஷபானா முந்திக்கொண்டு வெளியேறியதால் சன் டிவி அவரை வெளியேற்றியதா? அல்லது ஷபானா தானாகவே வெளியேறினாரா? என்பதை ரசிகர்கள் கருத்துக்கே விட்டு விடுவோம்.

Advertisement

Advertisement