• Nov 04 2026

திடீரென சுருதிஹாசன் எடுத்த அதிரடி முடிவு! கூலி திரைப்படத்தில் இருந்து விலகுவாரா?

shali / 2 years ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜூனா, சோபின் ஷாகிர், உபேந்திரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ரஜினி- லோகேஷ் முதன்முறையாக கூட்டணி சேர்ந்துள்ள நிலையில்  ரசிகர்கள் ஆவலுடன் இப்படத்தை எதிர்பார்த்துள்ளனர்.


இந்த நிலையில் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன் தான் ஏற்கனவே கமிட் ஆன இரண்டு படங்களில் இருந்து திடீரென விலகி இருக்கிறார். இதனிடையே கூலி படத்தில் இருந்தும் அவர் விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 


இவர் ஏற்கனவே தெலுங்கில் அடிவி சேஷ் ஹீரோவாக நடித்து வரும் டெக்காய்ட் படத்தில் ஹீரோயினாக கமிட் ஆன நிலையில், இப்படத்தின் டீசரும் வெளியானது. இப்படம் காதல் கதையாக உருவாகி வருவதாக கூறப்பட்ட நிலையில், இப்படத்தில் ஹீரோயின் தலையீடு அதிகம் இருப்பதாக கூறி ஸ்ருதிஹாசன்  விலகினார். 


சென்னை ஸ்டோரி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்த ஸ்ருதிஹாசன் அப்படத்தில் இருந்தும் விலகியுள்ளதாக தகவல் வெளியாகிறது. ஸ்ருதிஹாசன் தன் நண்பரும் இயக்குனருமான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் கூலி படத்தில் இருந்து விலகுவாரா? என கேள்வி எழுந்த நிலையில் அவர் விலக வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகும் தகவல் ரஜினி மற்றும் லோகேஷ் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



Advertisement

Advertisement