• Nov 08 2025

தீபாவளி கொண்டாட்டத்தைக் குழப்பிய குமார்... பழனி மீது திருட்டுப் பழியை சுமத்திய பாண்டியன்

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, சுகன்யா முத்துவேல் வீட்ட போய் எங்கட அப்பா, அம்மா சீர் கொடுத்திட்டு பழனியை பற்றி கவலைபட்டுட்டு போறாங்க என்கிறார். அதைக் கேட்ட பழனி என்னை பற்றி எதுக்காக கவலைப்பட்டாங்க என்று கேட்க்கிறார். அதுக்கு சுகன்யா உங்கள விட சின்ன பையன் ட்ராவெல்ஸ் வைச்சிருக்கான் ஆனா நீங்க அப்புடியே இருக்கீங்க என்று தான் கவலைப்பட்டாங்க என்கிறார்.


அதைக் கேட்ட பாட்டி கடை விஷயம் என்னாச்சு என்று கேட்க்கிறார். அதுக்கு முத்துவேல் கடை பார்த்தாச்சு என்கிறார். பின் பழனி எதுக்காக அண்ணா இவ்வளவு அவசரமா கடை பார்க்கிறீங்க என்று கேட்க்கிறார். மேலும் நான் இன்னும் மச்சான்கிட்டயும் அக்காகிட்டயும் இதைப் பற்றி பேசவே இல்ல என்கிறார். அதைக் கேட்ட சுகன்யா கோபப்படுறார்.

அதனை அடுத்து செந்தில் எல்லாரையும் படத்துக்கு போவமா என்று கேட்க்கிறார். அதுக்கு சரவணன் வீட்டிலேயே இருப்போம் ஜாலியாக இருக்கும் என்கிறார். அதைக் கேட்ட செந்தில் வீட்டில ஜாலியாக இருக்க என்னடா இருக்கு என்று கேட்க்கிறார். இதனைத் தொடர்ந்து பாண்டியன் பழனிகிட்ட வந்து புடவை வாங்கிறது காசு எங்கிருந்து வந்த என்று கேட்க்கிறார். மேலும் கடையில இருந்து பணத்தை எடுத்தனியா என்று கேட்க்கிறார்.


அதுக்கு பழனி தான் கடை காசை எல்லாம் எடுக்கல என்கிறார். அதனை அடுத்து எல்லாரும் தீபாவளியை கொண்டாடுறார்கள். அந்த நேரம் பார்த்து குமார் பட்டாசை கொளுத்தி சரவணன் காலுக்கு கிட்ட போடுறார். அதைப் பார்த்த சரவணன் கோபப்டுறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement