• Nov 08 2025

திருத்தப்போறோம் என்று சொன்னாங்களே.! என்ன நடந்த.? வைல்ட் கார்ட் என்ட்ரிஸை கலாய்த்த VJ

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் டெலிவிஷன் உலகில் தற்போது பேசப்படும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் சீசன் 9 தான். ஒவ்வொரு நாளும் புதிய திருப்பங்களுடன் ரசிகர்களை கவரும் இந்த ரியாலிட்டி ஷோ, தற்போது மிகுந்த பரபரப்பில் ஓடிக் கொண்டிருக்கிறது.


இந்த சீசனில் மொத்தம் 20 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்த நிலையில், தற்போது வரை ஐந்து பேர் வெளியேறியுள்ளனர். ஆனால் அதற்குப் பிறகு நிகழ்ச்சி மேலும் சுவாரஸ்யமாக மாறியது, காரணம் வைல்ட் கார்ட் என்ட்ரிகள்!

பிக் பாஸ் வீட்டுக்குள் நான்கு புதிய போட்டியாளர்கள் வைல்ட் கார்டாக அறிமுகமானார்கள். அவர்கள் வீட்டிற்குள் செல்லும் முன் ஊடகங்களிலும் ப்ரோமோக்களிலும், “நாங்கள் தான் வீட்டை சரி செய்வோம், எல்லாரையும் திருத்தி விடுவோம்!” என்று சொல்லி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கினர்.


ஆனால் வீட்டிற்குள் போன பின், அவர்கள் சொன்னபடி பெரிய மாற்றம் எதுவும் நடக்கவில்லை என்று பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். சிலர் சமூக வலைதளங்களில்,“வைல்ட் கார்ட் வந்து கலக்கம் பண்ணுவாங்கனு நினைச்சோம், ஆனா சும்மா இருக்காங்களே!” என்று கருத்து பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று வெளியான பிக்பாஸ் ப்ரோமோ ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. அந்த ப்ரோமோவில் விஜய் சேதுபதி “எல்லாரையும் திருத்திடுவேன், உள்ள போய் டிஸிப்ளின் கிளாஸ் எடுக்க போறேன். இப்படி எல்லாம் சொல்லிட்டு உள்ள போனாங்க… ஆனா அவங்க என்ன பண்ணிவைச்சிருக்காங்க… வாங்க இன்று இரவு கேட்போம்.” எனத் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement