• May 10 2024

தென்னிந்திய சினிமாவில் சாதிக்கும் இலங்கையை சேர்ந்த அஸ்மினின் அடுத்த படைப்பு: வெளியாகியுள்ள தகவல்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல பாடல்களை எழுதி வந்த இலங்கை தமிழரான ஐயோ சாமி புகழ் கவிஞர் அஸ்மின் அவர்கள் தற்போது இது  கதையல்ல நிஜம் என்ற தென்னிந்திய திரைப்படத்திற்கு பாடல் எழுதியுள்ளார்.

இந்த திரைப்படத்தின்  பெஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் தாணு  அவர்கள் இன்று மாலை வெளியிடுகிறார் என பொத்துவில் அஸ்மின் அவர்கள் தனது முகநூலில் பதிவிட்டிருக்கின்றார்.

யார் இந்த அஸ்மின்? 

 தமிழ் பேசும் உலகமெங்கும் நன்கு அறியப்பட்ட இலங்கை படைப்பாளியான பொத்துவில் அஸ்மின் கவிஞர், திரைப்பட பாடலாசிரியர், தொலைக்காட்சி  நிகழ்ச்சி தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு இவர் எழுதிய "வானே இடிந்ததம்மா" இரங்கல் பாடல் அவரது சமாதியில் இரண்டு மாதங்கள் 24 மணிநேரமும் தொடராக ஒலித்தது. அதனால் போயஸ்கார்ட்டன் அழைக்கப்பட்டு சசிகலாவினால் கெளரவிக்கப்பட்டார்.

மறைந்த பாடகர் பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு இலங்கையின் பிரபல பாடகர்கள் இணைந்து பாடிய "எழுந்துவா இசையே" என்ற இரங்கல் பாடலையும் இவரே எழுதியுள்ளார்.

விஸ்வாசம் படத்துக்காக "தூக்குத்தொற பெயரக்கேட்டா வாயப்பொத்தும் நெருப்பு", அண்ணாத்த படத்துக்காக "வர்ராரு வர்ராரு அண்ணாத்த"   

இவர் எழுதிய புரோமோ பாடல் அஜித்,ரஜினி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு உலகம் எங்கும் வைரலானது.


இலங்கையில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்காக நடிகர், இயக்குனர் T.ராஜேந்தர் அவர்கள் பாடிய "நாங்க வாழணுமா?சாகணுமா? சொல்லுங்க பாடலும் அஸ்மின் எழுதியதுதான்.

2012 ஆம் ஆண்டு நான் திரைப்படத்தில் "தப்பெல்லாம் தப்பே இல்லை" பாடல் ஊடாக விஜய் அண்டனி அவர்களால் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அஸ்மின்

 "அமரகாவியம்" படத்தில் ஜிப்ரான் இசையில் எழுதிய "தாகம் தீர கானல் நீரை காதலின்று காட்டுதே" என்ற பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான 'எடிசன்' விருது பெற்றுள்ளார்.

இதுவரையில் தேசிய ,சர்வதேச மட்டத்தில் 30 க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றிருக்கும் அஸ்மின்  பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் சங்க கவிதைப்போட்டியில் அகில இலங்கை மட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இலங்கை மண்ணின் இளம் இலக்கிய சாதனையாளர்.

பொத்துவில் அஸ்மினின் இலக்கிய பணியை பாராட்டி 2016 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் அப்போதைய இலங்கை  ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா அவர்கள் விருது வழங்கி கெளரவித்துள்ளார். 

2019 ஆண்டு கம்போடியாவில் நடைபெற்ற உலக கவிஞர்கள் மாநாட்டில் தமிழ் இலக்கிய பணிக்காக  கம்போடிய அரசின் கலாசார அமைச்சினால் சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.



 அதே ஆண்டு இலங்கை அரசினால் "பாரம்பரிய ,நவீன அரச கலைஞர் விருது விழா"வில் 23 ஆண்டுகளாக கலை இலக்கிய ஊடகத்துறையில் ஆற்றிவரும் பங்களிப்புக்காக "கலைச்சுடர்" பட்டம் வழங்கி இவர் கெளரவிக்கப்பட்டுள்ளார், என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement