• May 05 2024

மீண்டும் கதாநாயகனாக கலக்கவுள்ள சூரி

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் நடிகர் சூரி.  இவர் தற்போது திரைப்படங்களில் முதன்மையான  கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இவருக்கென ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது என்று சொல்லலாம். தற்போது சில தமிழ் திரைப்படங்களில் காமெடியன் கதாபாத்திரத்தில்   நடித்து வருகிறார்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘விடுதலை’. இப்படத்தில் விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், கிஷோர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 31ம் தேதி நிறைவடைந்ததாகப் படக்குழு தெரிவித்திருந்தது. அதனை தொடர்ந்து இப்படத்தின் ரீ ரெக்கார்டிங் பணிகளை நேற்று இசையமைப்பாளர் இளையராஜா தொடங்கியதாக தகவல் வெளியானது.

விடுதலை பட ஷூட்டிங் முடிந்த உற்சாகத்தில் இருக்கும் சூரி, தன் சொந்த ஊரான மதுரைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சூரி மீண்டும் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் SK புரொடக்ஷன் சார்பில் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும், கூழாங்கல் என்ற படத்தை இயக்கிய வினோத் ராஜ் இப்படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement