• Apr 28 2024

‘ஜெயிலர்’ படப்பிடிப்பு தளத்திலிருந்து ரசிகர்களுக்கு சூப்பர் க்ளிக்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றாலே அது நம்ம ரஜினிகாந்த் தான். 'தொட்டதெல்லாம் தங்கம்' என்று கூறுமளவிற்கு இவர் எந்தப் படம் நடித்தாலும் அந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருக்கும். 


அந்தவகையில் இவர் நடிப்பில் தற்போது 'ஜெயிலர்' திரைப்படம் தயாராகி வருகிறது. நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், ஷிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால், யோகிபாபு, ரோபோ சங்கர், தமன்னா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. 


அத்தோடு அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தின் உடைய படப்பிடிப்புக்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 'ஜெயிலர்' படப்பிடிப்புத் தளத்தில் ரஜினிகாந்த் எடுத்த லேட்டஸ் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.


அதாவது மேகன் லாலுடன் அவர் இணைந்து எடுத்த புகைப்படமே வெளியாகி இருக்கின்றது. இதனைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அந்தப் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement