• May 19 2024

மாமியாருக்கு Birthday... சூப்பரான பதிவின் மூலம்.. வாழ்த்துச் சொன்ன மருமகன்...!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

சினிமா ஜோடிகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர்கள் விக்னேஷ் சிவன்-நயன்தாரா. நானும் ரௌடித்தான் படத்தின் மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட்டு சில ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் செய்தார்கள்.

திருமணத்தைத் தொடர்ந்து வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட இவர்கள் இருவரும் தமது குழந்தைகளை சந்தோசமாக வளர்த்து வருகின்றார்கள்.


குடும்ப வாழ்க்கையைத் தாண்டி இவர்கள் இருவரும் தமது சினிமாப் பயணத்திலும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். விக்கியைப் பொறுத்தவரையில் சினிமாவில் மட்டுமன்றி சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருபவர். அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஏதாவது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றார்.


மேலும் நயன்தாராவும் சமீபத்தில் மகன்களுடன் இருக்கும் வீடியோவைப் பதிவிட்டு இன்ஸ்டாவில் மாஸ் என்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் இன்றைய தினம் நயன்தாராவின் தாயார் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். 


இதற்குப் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்ற நிலையில் விக்கியும் தனது மாமியாருக்கு வாழ்த்துக் கூறியுள்ளார். அதாவது அவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தங்களுக்கு எப்போதுமே பக்க பலமாக இருந்து வருவது அவர் தான் எனவும் கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார் விக்கி.


Advertisement

Advertisement