நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் நடிக்கும் போது பல விமர்சனங்களுக்கும் கேலிக் கிண்டலுக்கும் உள்ளானார். ஆனால் நாளடைவில் பலரும் வியந்து பார்க்கக்கூடிய உச்ச நடிகராக வளர்ச்சி அடைந்துள்ளார். இது அவருடைய கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி ஆகவே காணப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது 'பராசக்தி' திரைப்படம் தயாராகி வருவதோடு இந்த படத்தை சுதா கொங்கார இயக்குகின்றார். மேலும் இதில் ஜெயம் ரவி வில்லன் ஆகவும் அதர்வாவும் பிரபல நடிகையான ஸ்ரீ லீலாவும் நடிக்கின்றார்கள். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
d_i_a
இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பற்றியும் தற்போது அவர் நடிக்கும் பராசக்தி படம் பற்றியும் பிரபல விமர்சகர் செய்யாறு பாலு சில விஷயங்களை முன் வைத்துள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், பராசக்தி டீசரை பார்க்கும்போது உண்மையிலேயே ஒரு வைப்பாக காணப்படுகின்றது. இதை நான் சும்மா சொல்லவில்லை. உண்மையில் ஆரம்பத்தில் திருச்சியில் எங்கேயோ ஒரு இடத்தில் கல்லூரியில் படித்து, மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆகி, அதன் பின்பு சேனல் ஒன்றில் பிரபலமாகி இறுதியில் நடிகர் ஆகி பல கேலிக் கிண்டல்களை சந்தித்து அழுது புலம்பியவர் தான் சிவகார்த்திகேயன்.
அமரன் படத்தின் வெற்றிக்கு முன்னால் அவரிடம் சொந்தக் கார் கூட இல்லை. வாடகை காரில் தான் வந்ததாக பேட்டி ஒன்றில் எமோஷனலாக பேசியிருந்தார். அது மட்டும் இல்லாமல் 75 கோடி ரூபாய் கடன் இருந்ததாகவும் தெரிவித்தார்.
ஆனாலும் அதிலிருந்து வெளியே வந்து அவர் மீது சுமத்தப்பட்ட விமர்சனங்களுக்கு எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல் இருந்தது தான் அவருடைய புத்திசாலித்தனம்.
மேலும் சிறந்த கதை தேர்வாக அமரப்படத்தை எடுத்துக் கொண்டார். இந்த படத்தில் ஒரு கோடி ரூபாய் வரை அவருக்கு சம்பளமாக வழங்கப்பட்டது. தற்போது பராசக்தி டீசரை பார்க்கும்போது இந்த படத்தை எதற்காக சூர்யா மிஸ் பண்ணினார் என்று தான் யோசித்தேன்.
மேலும் வணங்கான் படத்தையும் சூர்யா மிஸ் பண்ணி விட்டார். ஆனால் வாடிவாசல் படத்தை அவர் மிஸ் பண்ண கூடாது. பராசக்தி படத்தில் அவர் நடிக்காததற்கு காரணம் இந்த படத்தின் கதை இந்தியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது தான்.
அவர் தற்போது மும்பையில் வசித்து வரும் நிலையில் இந்தி சமுதாயத்திற்கு எதிராக படத்தில் நடித்து எதிர்ப்புகளை சந்திக்க அவர் விரும்பவில்லை. அதனால் தான் அவர் இவ்வாறான முடிவு எடுத்திருக்க வேண்டும் என செய்யாறு பாலு மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Listen News!