விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஆரி அர்ஜுன். அதற்குப் பிறகு இவர் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகின்றார். இறுதியாக இவரது நடிப்பில் ‘ஃபோர்த் ஃப்ளோர்’ திரைப்படம் வெளியானது.
இந்த நிலையில், அந்தப் படத்தின் ரிலீஸின் போது தாம் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்து அவர் பேசியுள்ளார். தற்போது அவர் அளித்த பேட்டி வெளியாகியுள்ளது.
அதில் அவர் கூறுகையில், படத்தின் ரிலீஸுக்கு மால் முழுவதும் தியேட்டர் கொடுக்க மாட்டோம் என்று சொல்கிறார்கள். எல்லா மால்களிலும் தியேட்டர் தரமாட்டோம் என்கிறார்கள். நாங்கள் அவர்களுடன் பேசி, சண்டையிட்டு தியேட்டர் கேட்டு வருகிறோம். காரணம் என்ன என்றால், இந்தப் படத்திற்கு விளம்பரம் குறைவாக உள்ளது என்று கூறுகின்றனர்.

மேலும், 'தாய் கிழவி’ படத்தை எப்படி ப்ரோமோட் செய்கிறார்கள் பாருங்கள் என்று சுட்டிக்காட்டுகின்றனர். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன். அவருக்கு பணபலம் உள்ளது. ஆனால் எங்கள் தயாரிப்பாளர் சொந்த தொழிலில் சம்பாதித்த பணத்தில் ஒரு நல்ல படம் எடுக்க வேண்டும் என்று சினிமாவுக்கு வந்தவர்.
அவரிடம் அந்த அளவுக்கு பொருளாதார வலிமை இருக்குமா? ஒரு படத்துக்கு எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அதற்குள் போஸ்டர், ப்ரோமோஷன் எல்லாம் செய்கிறோம். அந்த வரம்புக்குள் தான் செய்கிறார்கள்.
நான் சினிமாவில் 15 ஆண்டுகளாக இருக்கிறேன். எல்லோருக்கும் என்னை தெரியும். எனக்கே இந்த நிலைமை என்றால், நாளை புதுமுக நடிகரின் நிலை என்ன? அவர்கள் எவ்வளவு செலவு செய்ய வேண்டும்? என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
Listen News!