தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழும் விஜய் தற்போது முழுநேரமாக அரசியலில் பயணித்து வருகின்றார். இவருடைய நடிப்பில் ரிலீசுக்கு தயாராக இருந்த ‘ஜனநாயகன்’ படமும் சென்சார் பிரச்சினையால் தள்ளிப் போனது. தற்போது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல பிரச்சினைகள் சூழ்ந்துள்ளன.
கடந்த சில ஆண்டுகளாகவே விஜயின் மனைவி பொது நிகழ்ச்சிகளில் அவருடன் தென்படாததால் பல வதந்திகள் பரவின. ஆனால் அவர் தனது குழந்தைகளின் கல்வி மற்றும் வெளிநாட்டு பணிகளுக்காக அங்கேயே தங்கி இருப்பதாக கூறப்பட்டது.
இவ்வாறான நிலையில், சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், வலைப்பேச்சு பிஸ்மி இது தொடர்பில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில், இந்த விவாகரத்து விஷயத்தை வெறும் விவாகரத்து என மட்டும் பார்க்க முடியாது. அதனை ஊடகங்களும் பெரிதாக பேசக்கூடாது.
விஜய்யும் சங்கீதாவும் பிரிந்து விட்டார்கள் என்ற செய்தியை வெளியிடுவது தான் பத்திரிகையாளர்களின் கடமை. ஆனால் அதற்கு யார் காரணம் என்ற பெயரில் புலனாய்வு செய்து அவர்களை காயப்படுத்துவது சரி அல்ல.

எனினும், இவர்களுடைய விவாகரத்து விஷயத்தை தனிப்பட்டதாகக் கடந்து போக முடியவில்லை. அவர்கள் சில ஆண்டுகளாகவே பிரிந்து இருக்கின்றார்கள். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு விஜயின் அரசியலை காலி செய்ய சிலர் செய்த சதியாக நான் இதனை பார்க்கின்றேன்.
சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஆவணம் எப்படி இணையத்தில் வெளியானது? இந்த கேள்விக்கு விடை தேடினாலே அதன் பின்னால் யார் இருக்கின்றார்கள் என்பது தெரியும்.
சங்கீதா லண்டனில் இருக்கின்றார். அவருக்கு சென்னையில் உறவினர்களோ நண்பர்களோ இல்லை. ஆனால் முதல்வர் மு.க. ஸ்டாலினின் சகோதரி செல்வி, சங்கீதாவுடன் நட்பாக இருக்கின்றார். இதைப் பார்க்கும்போது, சங்கீதாவை வைத்து விஜயை பலவீனப்படுத்த திமுக பயன்படுத்தியிருக்கலாம் என தெரிகிறது.
சங்கீதா இதை முன்பே செய்திருந்தால் விஜய்க்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கும். அதேபோல் தேர்தல் முடிந்த பின் செய்திருந்தாலும் அது நெகட்டிவாக இருந்திருக்கும். ஆனால் தற்போது பலரும் விஜய்க்கு ஆதரவாக இருக்கின்றார்கள். விஜயும் இதுபற்றி வாய் திறக்கவில்லை. அவர் பொது வெளியில் பேச வேண்டிய அவசியம் இல்லை. இதனை நீதிமன்றத்தில் முறையாக சந்திப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.
Listen News!