• May 02 2024

சிவகார்த்திகேயனின் எஸ்கே 21 படத்திற்கு வந்த புதிய சோதனை- குழப்பத்தில் கமல்ஹாசன்

stella / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய மாவீரன் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.இந்தப்படத்தில் இவருடன் அதிதி ஷங்கர், யோகிபாபு, சரிதா ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர்.

இதனை அடுத்து  தற்போது எஸ்கே21 படத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடிய சாய் பல்லவி இணைந்துள்ளார். காஷ்மீரில் இந்தப் படத்தின் சூட்டிங் 60 நாட்கள் திட்டமிடப்பட்டன. ஆனால் திட்டமிடப்பட்டதற்கு மாறாக படத்தின் சூட்டிங் 90 நாட்கள் நீ


இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீரின் கடுமையான பனிப்பொழிவுக்கு இடையில் நடத்தப்பட்டுள்ளது. படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ள நிலையில், போர்க்காட்சிகளும் நடத்தப்பட்டுள்ளது. இதனால் படத்தின் சூட்டிங் அதிக நாட்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

 சென்னை திருவேற்காட்டில் அப்பார்ட்மெண்ட் ஒன்றிலும் மாங்காட்டில் மருத்துவமனை ஒன்றிலும் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. சென்னை சூட்டிங்கில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய் பல்லவி நடித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே சென்னை சூட்டிங்கை தொடர்ந்து மீண்டும் காஷ்மீரில் 10 நாட்கள் சூட்டிங் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement