பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பரத். தொடர்ந்து செல்லமே, காதல், பட்டியல், வெயில் போன்ற நல்ல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தை கொண்டுள்ளார்.
சிறு வயதில் இருந்தே டான்சில் மிகவும் ஆர்வம் கொண்ட நடிகர் பரத் , ஒரு சர்வதேச டான்ஸ் ஸ்கூலில் சேர்ந்து டான்ஸ் கற்றுக்கொண்டார். மலையாளத்தில் இவர் நடித்த தி 4 பீப்பில்’ படம் 2004 இல் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனது
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நடுவண் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று 12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா 2022-ல் தேர்வானது.
தற்போது எம்.சக்திவேல் இயக்கத்தில் பரத் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “மிரள்”. இப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக வாணி போஜனும், முக்கிய கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிக்குமாரும் நடிக்கின்றனர்.
இவர்களுடன் மீர் கிருஷ்ணன், ராஜ்குமார்,காவ்ய, அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி மாஸ்டர் அங்கித் சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு பிரசாந்த் எஸ்.என். இசையமைக்கிறார்.பாலா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கலைவாணன்.ஆர்படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.ஸ்லாஷர் த்ரில்லராக உருவாகியுள்ள "மிரள்" திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.
இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூகவலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகின்றது.
பிற செய்திகள்:
- 78வது பிறந்தநாளை கொண்டாடும் இசைஞானி பற்றிய சில சுவாரஷிய விஷயங்கள்..!
- முன்னாள் மனைவிக்கு எதிராக பிரபல நடிகர் தொடர்ந்த அவதூறு வழக்கு: நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு
- கே கே-இன் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த இசையமைப்பாளர்கள்..!
- 50 நாட்களில் KGF 2 படத்தின் மொத்த வசூல் விவரம்
- காதலனுக்காக அந்த விசயத்தை செய்த வாரிசு நடிகை-கசிந்த தகவல்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!