• Sep 10 2024

’கோட்’ பெண்களை கவரும் படமா? பிரபலத்தின் மனைவி பார்த்து ஆச்சரியம்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்துள்ள ’கோட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ப்ரமோஷன் பணிகள் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தை விஜய் முழுவதுமாக பார்த்துவிட்டு வெங்கட் பிரபுவை அவர் பாராட்டியதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியானது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவலின் படி அர்ச்சனா கல்பாத்தி தனது குடும்பத்தினருடன் விஜய்யுடன் சேர்ந்து இந்த படத்தை பார்த்ததாக தகவல் தெரிகிறது. குறிப்பாக அகோரம் கல்பாத்தி அவர்களின் மனைவிக்கு இந்த படம் மிகவும் பிடித்து விட்டதாகவும் அர்ச்சனா கல்பாத்தி குடும்பத்தில் உள்ள பெண்கள் அனைவருமே இந்த படத்தை பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.



இந்த தகவல்களில் இருந்து பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் படமாக ’கோட்’ படம் இருக்கும் என்றும் பெண்களை கவரும் வகையிலான காட்சிகள் அதிகம் இருக்கும் என்றும் யூகிக்க முடிகிறது. ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடினாலும் குடும்பங்கள் கொண்டாடும் படம் என்ற வகையில் பெண்களும் இந்த படத்தை ரசிப்பார்கள் என்பதால் இந்த படம் இப்போதே சூப்பர் ஹிட் என்று நம்பப்பட்டு வருகிறது.

ஒரு பக்கம் யுவன் சங்கர் ராஜாவின் பாடல் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும், இன்னொரு பக்கம் விஜய் மற்றும் அர்ச்சனா கல்பாத்தி குடும்பத்தினர் இந்த படத்தை சிலாகித்துக் கூறியதை அடுத்து தற்போது படக்குழுவினர் மிகுந்த நம்பிக்கை உடன் இருப்பதாக தெரிகிறது.

Advertisement

Advertisement