• Mar 29 2024

இதுவரை எந்த நடிகரும் செய்யாத செயலை செய்யும் சிவகார்த்திகேயன்- பிரபலங்களிடம் இருந்து குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு  வந்தாலும் தனது விடா முயற்சியினால் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் தான் சிவகார்த்திகேயன். மெரினா என்ற படத்தின் மூலம் அறிமுகமான சிவகார்த்திகேயனுக்கு எதிர்நீச்சல் என்ற படத்தின் மூலம் திருப்புமுனை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நெல்சனின் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனக்கெ தனி ரசிகர் பட்டாளத்தையே சேர்த்துக் கொண்டார்.இதன் பிறகு வெளியான டான் திரைப்படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.


 இந்நிலையில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் வெளியானது.மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது. மேலும் இப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் தகவல் வந்தது. இந்நிலையில் விநோயோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை தயாரிப்பாளருடன் இணைந்து சிவகார்த்திகேயனும் பொறுப்பேற்றுள்ளாராம்.


இதையடுத்து பிரின்ஸ் படத்தினால் விநியோகஸ்தர்களுக்கு மொத்தம் ஆறு கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அதில் பாதி பணத்தை சிவகார்த்திகேயன் நஷ்ட ஈடாக கொடுக்கவுள்ளார். ஒரு முன்னணி ஹீரோ தயாரிப்பாளரின் நஷ்டத்தில் பங்கெடுப்பது கோலிவுட் வட்டாரங்களை சார்ந்தவர்களால் பாராட்டப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement