• May 04 2024

டான் படத்தின் வெற்றியை சிறப்பாகக் கொண்டாடிய படக்குழு- சக்ஸஸ் மீட்டில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

வெள்ளித்திரையில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் முக்கிய நடிகர் தான் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியாகிய திரைப்படம் தான் டான். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிய இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே அதிகளவான வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இப்படத்தினை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியிருப்பதோடு ப்ரியங்கா மோகன் எஸ்.ஜே சூர்யா ஷிவாங்கி ஆகியோரும் இன்னும் பல நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

அத்தோடு இப்படம் வெளியாகிய முதல் நாளில் 13 கோடியும் இரண்டாவது நாளில் 11 கோடியும் மூன்றாவது நாளில் 9 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் தற்போது படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இந்த சக்ஸஸ் மீட்டில் சிவகார்த்திகேயன் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் படக்குழுவினரோடு கலந்துகொண்டுள்ளனர். இது சம்மந்தமான புகைப்படங்களை லைகா நிறுவனம் பகிர, அது இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement