• Oct 18 2024

'சிறகடிக்க ஆசை’ விஜயா மகனும் சீரியலில் நடிக்கிறாரா? வரவேற்கிறது விஜய் டிவி..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடித்துக் கொண்டே இருக்கும் அனைத்து கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதே, இந்த சீரியலின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த சீரியலில் விஜயா என்ற கேரக்டரில் நடித்துள்ள அனிலாவுக்கு நடிப்பிற்காக பாராட்டுக்கள் ஒரு பக்கம் குவிந்து கொண்டு இருந்தாலும் அவரை பலர் மிரட்டி வருவதாகவும் மீனாவை ஏன் கொடுமைப்படுத்துகிறீர்கள் என்று செல்லும் இடமெல்லாம் கேட்பதாகவும் அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

விஜய் டிவியில் ஏற்கனவே சில சீரியல், ரியாலிட்டி ஷோக்களில் அனிலா தோன்றியிருந்தாலும் அவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது சிறகடிக்க ஆசை சீரியல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அனிலாவின் மகனும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியலில் நடிக்க இருப்பதாகவும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.  அனிலா மகன் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிதாசன் காலனி என்ற சீரியலில் நடித்த நிலையில் அந்த சீரியல் சில மாதங்களிலேயே திடீரென முடிக்கப்பட்டது. இதனை அடுத்து தற்போது புதிய சீரியலில் நடிக்க இருப்பதாகவும் கண்டிப்பாக அவருக்கு இந்த சீரியல் ஒரு திருப்புமுனையை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement