• Apr 25 2026

பாக்கியாவை காலி பண்ணிய ஈஸ்வரி..!! ராதிகா கேட்ட ஒற்றைக் கேள்வி! பாக்கியலட்சுமியில் அடுத்து நிகழ்ப்போவது ..??

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ராமமூர்த்தியும் பாக்கியாவும் கிச்சனில் இருந்து ஜெனி எப்படி வந்தா? என்ன பண்ணினா? என்று பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அங்கு ராதிகாவும் சமைத்துக் கொண்டு இருக்கிறார்.

இதன் போது பாக்கியா, ஆமா மாமா எல்லாரும் அவங்க எங்க சேர மாட்டங்களோ என்று பயத்துல தான் இருந்தோம். ஆனா நானும் ஜெனியின் அம்மாவும் சேர்ந்து.. என பேசிக் கொண்டு இருக்கையில் இடையில் புகுந்த ஈஸ்வரி, என்ன பண்ணினா என்ன நடக்கும் என எனக்கு தெரியும். அதான் செழியனுக்கு கல்யாணம் பண்ண பார்த்தேன். அதான் எல்லாத்துக்கும் காரணம் என சொல்லிட்டு போகிறார்.


இதைக் கேட்டு பாக்கியா சிரித்து விட்டு இருக்க, அத்தை உங்கள காலி பண்ணிட்டு போறாங்க உங்களுக்கு கோவம் வர இல்லையா என ராதிகா கேட்க, சில நேரத்துல கோவம் வரும் ஆனா  நம்ம அத்தை  தானே என சொல்கிறார்.

அதற்கு ராதிகா, என்ன நம்ம அத்தையா என கேட்கிறார். இது தான் தற்போது வெளியான ப்ரோமோ.

Advertisement

Advertisement