• May 13 2024

'ஐயா கால்ஷீட் கிடைக்கட்டும் கண்டிப்பா சேர்ந்து நடிப்போம்'- தளபதி பற்றி பேசிய கமல்ஹாசன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி உலக நாயகன் என்ற பட்டத்தோடு வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தினை மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இப்படமானது வருகின்ற ஜுன் மாதம் 3 ம் திகதி வெளியாகவுள்ளதால் இப்படத்தின் ப்ரோமோஷன் உலகளவில் நடைபெற்று வருகிறது.இதில் அனைத்து ப்ரோமோஷன் நிகழ்சிகளிலும் கமல் ஹாசன் கலந்துகொண்டு வருகிறார்.

அந்த வரிசையில் இன்று மலேஷியாவில் விக்ரம் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் இருந்த கமல் ஹாசனிடம் மீடியாவை சேர்ந்த பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.அதில் ஒருவர் " கமல் ஹாசனும் தளபதி விஜய்யும் எப்போது இணைந்து நடிப்பார்கள் " என்று கேள்வி கேட்டுள்ளார்.

https://twitter.com/sekartweets/status/1530874850926940160

இதற்கு பதிலளித்த கமல் ஹாசன் " தளபதி ஐயா கால்ஷீட் கிடைக்கட்டும், கண்டிப்பா சேர்ந்து நடிப்போம் " என்று கூறியுள்ளார். விஜய் குறித்து கமல் ஹாசன் பேசியுள்ள வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement