• May 18 2024

பத்து தல படப்பிடிப்பு தளத்தில் கெத்தாக நிற்கும் சிம்பு.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் கௌதம் கார்த்தி ப்ரியா பவானி சங்கர் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் பத்து தல. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார்.இந்த திரைப்படம் கன்னடத்தில் வெளியான முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.


இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான 'பத்து தல' படத்தின் சிறப்பு போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.


இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றன. ரசிகர்களுடன் சிம்பு இருப்பது போன்றும், இயக்குநர் ஒபிலி என்.கிருஷ்ணா சிம்புவுடன் பேசுவது போன்றும் அந்த புகைப்படங்கள் அமைந்துள்ளன. 


இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.விறு விறுப்பாக முழுவீச்சில் நடைபெற்று வரும் இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement