• Sep 24 2024

விஜயாவுக்கு பளாரென அறைந்த ஸ்ருதியின் அம்மா.. பார்வதி செய்த காரியம்? வைரல் வீடியோ

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியல் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டது. ஆனால் நாளடைவில் சரிவை  சந்தித்தது.

தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி தனது மகனையும்  அம்மாவையும் தனக்கு அருகிலேயே தங்க வைப்பதற்காக வாடகைக்கு வீடொன்றை எடுக்கின்றார். மேலும் க்ரிஷையும் ஸ்கூல் ஒன்றில் சேர்த்து விடுகின்றார்.

இதை அறிந்த பிஏ ரோகிணிக்கு மீண்டும் டாச்சர் கொடுக்க ஆரம்பித்துள்ளார். அதன்படி தனக்கு 30 லட்சம் தருமாறும் இல்லையென்றால் வீட்டிற்கு வந்து எல்லா உண்மையும் சொல்லி விடுவேன் என்றும் மிரட்டுகிறார். இதனால் ரோகிணி என்ன செய்வதென்று தெரியாமல் மீண்டும் சிட்டியிடம் சென்று அவனை தட்டி வைக்குமாறு சொல்லுகின்றார்.


அதற்கு சிட்டி தான் செய்து தருவதாகவும், ஆனால் அதற்கு பதிலாக முத்துவின் போனில் உள்ள சத்யாவின் வீடியோவை எடுத்து தருமாறும் சொல்லுகின்றார். ரோகினியும் வேறு வழி இல்லாமல் சரியென சொல்லுகின்றார்.

இந்த நிலையில் தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் விஜயா, சுதா, பார்வதி ஆகியோர் ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார்கள். அதில் இருவரும் விஜயாவுக்கு அடிப்பது போல் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.

மேலும் இதை பார்த்த ரசிகர்கள் ஸ்ருதியின் அம்மா விஜயாவுக்கு அடித்து விட்டாரே என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்..

Advertisement

Advertisement