• Oct 05 2024

பிக் பாஸ் ஷோவுக்குள்ள ஷ்ருதிகா போறாங்களா? தனக்கு சப்போர்ட் பண்ணுமாறு வீடியோ

Aathira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியான ஸ்ரீ படத்தின் மூலம் நடித்து பிரபலமானவர் தான் ஷ்ருதிகா. அந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அதன்பின்பு ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் வெள்ளித் திரையிலிருந்து விலகினார்.

இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அறிமுகமாகி சின்னத்திரையில் பிரபலமாக மாறினார். இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர் கூட்டம் காணப்படுகின்றது.

திரைப்படங்களில் ஹீரோயினாக அறிமுகமாகி தான் நடித்த படங்கள் எதுவும் சரி இல்லாத நிலையில், திருமண பந்தத்தில் அடி எடுத்து வைத்தார். தற்போது ஒரு குழந்தைக்கு அம்மாவான ஷ்ருதிகா சின்னத்திரையில் கலக்கி வருகின்றார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பலருடைய மனதில் தேவதையாகவே வலம் வந்தார். இவர் தன்னுடைய மனதில் இருக்கும் ஆசையை வெளிப்படையாகவே பேசி பலரையும் பீல் பண்ண வைத்திருக்கின்றார். குக் வித் கோமாளி சீசன் 3ல்  வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்பு சமூக வலைதள பக்கத்திலும் ஆக்டிவாக காணப்படுகிறார்.


இந்த நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை ஷ்ருதிகா. அதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனக்கு சப்போர்ட் பண்ணியது போல மீண்டும் தான் ஒரு டிவி ஷோவுக்குள் போக உள்ளதாகவும், அதற்கு உங்களுடைய சப்போர்ட் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் அப்படி என்றால் பிக் பாஸ் சீசன் 8ல் ஷ்ருதிகா கலந்து கொள்ள போகிறாரா? அது தமிழிலா அல்லது ஹிந்தியா என புலம்பி வருகின்றார்கள். எனினும் இது தொடர்பிலான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத  நிலையில் ஷ்ருதிகா எந்த டிவி ஷோவுக்குள் நுழைய உள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement