• May 09 2024

“AK 61” படத்தில் இணைந்த மற்றுமொரு முக்கிய பிரபலம்- அட இவர் கார்த்தி பட நடிகராச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவரது நடிப்பில் தற்பொழுது ஏ.கே 61 என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தை வலிமை பட இயக்குநராக எச். வினோத் இயக்கி வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பானது சமீபத்தில் ஹைதராபாத்தில் ஆரம்பித்தது.ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

மேலும் ஜான் கொக்கன், ராஜதந்திரம் வீரா, நடிகை நாயனா சாய் ஆகியோரும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இப்போது ஜிகர்தண்டா மற்றும் சதுரங்க வேட்டை நான் மகான் அல்ல ஆகிய படங்களில் கவனம் ஈர்த்த நடிகர் ராமச்சந்திரன் துரைராஜ் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement