• Apr 30 2024

என் குழந்தைய ஒரு தடவ கண்ணுல காட்டு"- இந்த பெயர் தான் வச்சிருப்பேன்- அப்பா பாசத்தில் கண்ணீர் மல்க கதறிய அர்னவ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். திவ்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஆனால் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது.

இதையடுத்து தன்னுடன் சீரியலில் இணைந்து நடித்த நடிகர் அர்னாவை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டார். அத்தோடு தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தையும் பகிர்ந்துக் கொண்டார்.


பின்னர் தனது கணவர் அர்னாவ் தன்னுடன் செல்லம்மா சீரியலில் நடிக்கும் அன்ஷிதா என்பவருடன் நெருக்கமாகி, தன்னை தவிர்ப்பதாகவும், கர்ப்பமாக இருக்கும் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் திவ்யா. இதையடுத்து அர்னவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து மீடியாக்களை சந்தித்த திவ்யா, அர்னவ் மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதன் பின்னர் இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள்.சமீபத்தில் திவ்யா தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் அறிவித்திருந்தார்.


இந்த நிலையில் அர்னவ் பிரபல சேனலுக்க பேட்டியளித்துள்ளார். அதில் நான் எந்த தவறு செய்யாமலேயே தண்டனை அனுபவிச்சிருக்கிறேன்.அதனால் திரும்ப திவ்யா கூட சேருவேன் என்றெல்லாம் இல்லை. நிறைய கனவு கண்டேன். எனனோட திருமண வாழ்க்கைக்காக குடும்பத்தையே எதிர்த்துக் கல்யாணம் பண்ணினேன் ஆனால் அது 5 வருஷத்திலேயே முடிஞ்சிருச்சு. எனக்க பொண்ணு பிறந்திருக்கு ஆனால் என்னால பார்க்க கூட முடில.

நேராகப் போய் பார்க்கணும் என்றால் வீட்டில இருக்கிறவங்க கிட்டையும் கேட்கணும் நிறைய சட்ட சிக்கல் இருக்கு. அதனால் நான் பொண்ணை போய் பார்க்க மாட்டேன். ஆனால் வீடியோ காலில் பார்க்கிறமாதிரி வாய்ப்புக் கிடைத்தால் கட்டாயம் பார்ப்பேன். அவளால என் குழந்தையை பார்க்க முடியா விட்டால் என்கிட்ட தந்தால் பார்த்துக் கொள்ளுவேன் நல்ல அப்பாவா இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.


மேலும் என் பொண்ணோட இருந்திருந்தால் குதா என்று பெயர் வைத்திருப்பேன். என்னால என் பொண்ணை பார்க்க முடில என்பது தான் ரொம்ப வருத்தம் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement