• May 12 2024

அப்படி நடிந்திருக்க கூடாது, ரொம்ப தவறு- மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்ட raghava lawrence- அடடே இது தான் காரணமா?

stella / 8 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் பி.வாசு இயககத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான்  சந்திரமுகி 2. இப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. 

இந்த விழாவில் கலந்து கொண்ட கல்லுாரி மாணவர்களை பவுன்சர் தாக்கியிருந்தனர். இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.இதனால் இதற்கு மன்னிப்புக் கேட்டு ராகவா லாரன்ஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது 


வருக்கும் வணக்கம், சந்திரமுகி 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது பவுன்சர் ஒருவர், கல்லூரி மாணவருடன் சண்டையில் ஈடுபட்ட துரதிஷ்டமான சம்பவம் பற்றி தற்போது தான் அறிந்தேன். முதலில் இந்த சம்பவம் அரங்கிற்கு வெளியே நடந்ததால் நானோ அல்லது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோ இது குறித்து அறிந்திருக்கவில்லை.மாணவர்களை நான் எவ்வளவு நேசிக்கிறேன் மற்றும் அவர்கள் வளர வேண்டும் என்று நான் எந்த அளவு விரும்புகிறேன் என்பது அனைவருக்கும் தெரியும்.


 அப்படிப்பட்ட நபராக இருப்பதால், இதுபோன்ற சண்டைகளுக்கு நான் எப்போதும் எதிரானவன். நாம் செல்லும் எல்லா இடங்களிலும் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புகிறேன்.எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஒருவரை அடிப்பது கண்டிப்பாக தவறு, அதிலும் குறிப்பாக மாணவராக இருக்கும் போது இது நடந்திருக்கக்கூடாது. அந்த நேரத்தில் நடந்ததற்கு நான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மேலும் இது போன்ற செயல்களில் இனிமேல் பவுன்சர்கள் ஈடுபட வேண்டாம் என்று மனதார கேட்டுக்கொள்கிறேன். நன்றி” என அந்த பதிவில் லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement