• Jul 15 2026

தியேட்டர்களில் இனி ஸ்னாக்ஸ் விற்கக்கூடாதா? முதலமைச்சருக்கு அதிரடி கோரிக்கை- பேரரசு

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

திரையரங்குகளில் விற்கப்படும் உணவு மற்றும் பானங்களின் அதிக விலை குறித்து தற்போது மீண்டும் விவாதம் எழுந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து இயக்குநர் பேரரசு தெரிவித்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அவர் கூறியதாவது, கோயில்களில் உணவுப் பொருட்களின் விலையை அரசு கண்காணித்து கட்டுப்படுத்துவது போல, திரையரங்குகளிலும் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை நியாயமானதாக இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றார்.


இன்றைய நிலையில் பல திரையரங்குகளில் சிறிய அளவிலான ஸ்னாக்ஸ் மற்றும் குளிர்பானங்களுக்கே அதிக விலை வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் குடும்பமாக திரையரங்கிற்கு செல்வது கூடுதல் செலவாகி, பலர் தியேட்டர் அனுபவத்தை தவிர்க்கும் நிலையும் உருவாகியுள்ளது. இதை சரிசெய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கட்டணங்கள் மற்றும் கூடுதல் செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டால் மட்டுமே மீண்டும் அனைத்து தரப்பு மக்களும், குறிப்பாக குடும்பங்கள், மகிழ்ச்சியுடன் திரையரங்கிற்கு வரத் தொடங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement