• Jun 17 2024

அம்மா வரலன்னு கண்ணீர் விட்ட ஷிவினின் நெகிழ்ச்சி தருணம்...அப்பிடி என்னதான் நடந்துச்சு..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர்.

எனினும் இதற்கு அடுத்தபடியாக, தற்போது பிக் பாஸ் வீட்டில் Freeze டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் மீதமுள்ள 9 போட்டியாளர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் வருகை தந்த வண்ணம் உள்ளார்கள்.முந்தைய வார டாஸ்க்கிற்கு மத்தியில் குடும்பத்தினர் குறித்து பேசியும், கடிதங்கள் எழுதியும் நிறைய போட்டியாளர்கள் கண் கலங்கி போயிருந்தனர்.

மேலும் அப்படி ஒரு சூழலில், இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கி அழுதனர்.

மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இது தவிர அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், பின்னர் மணிகண்டா ராஜேஷை பார்க்க அவரது தாய், மனைவி, குழந்தை மற்றும் நடிகையும், சகோதரியுமான ஐஸ்வர்யா ராஜேஷூம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருந்தார்கள்.

அதே போல ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். இதே போல, ஏடிகேவை பார்க்க அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் உள்ளே வந்திருந்தனர். போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தந்த வண்ணம் இருப்பதால், பிக் பாஸ் வீடே தற்போது எமோஷனல் மோடிற்கு மாறி உள்ளது.

இவ்வாறுஇருக்கையில், ஷிவின் தாயார் பிக் பாஸ் வீட்டிற்கு வராமல் போனதை எண்ணி அவர் வருத்தம் அடைந்து கண்ணீர் விட்டிருந்தார். அத்தோடு ஷிவினை பார்க்க வந்த நெருங்கிய தோழியும், தாய் மற்றும் சகோதரி ஆகியோரை அழைத்ததாகவும் ஆனால் அவர்கள் வரவில்லை எனக் கூறியதையும் கண்ணீர் மல்க ஷிவினிடம் தெரிவித்திருந்தார்.

மேலும் அப்படியொரு சூழலில் தான், ரச்சிதாவின் தாயார் உள்ளே வந்திருந்த சமயத்தில், ஷிவினைக் கட்டியணைத்து கொண்ட விஷயம் பெரியளவில் பிக் பாஸ் பார்வையாளர்களை மனம் குளிர வைத்திருந்தது. ரச்சிதா மற்றும் ஷிவின் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் சிறந்த நண்பர்களாக வலம் வருகின்றனர். மேலும் அப்படி இருக்கையில், Freeze டாஸ்க்கில் பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்த ரச்சிதாவின் தாயார், ஷிவினை தனது இன்னொரு மகளாக பார்ப்பதாகவும், மிகவும் பிடித்த போட்டியாளர் என்றும் பெருமிதத்துடன் கூறினார். அதே போல, ரச்சிதாவின் தந்தைக்கும் ஷிவின் தான் ஃபேவரைட் போட்டியாளர் என்றும் கூறி இருந்தார்.

ரச்சிதாவின் தாயாரை போல, ஏடிகேவின் தந்தையும் ஷிவினை ஒரு மகளை போல பார்ப்பதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தார். இதே போல, முன்பு வந்த மைனா நந்தினியின் கணவரும் ஷிவினை பாராட்டி பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது. அத்தோடு தனது தாயாரை பார்க்க முடியவில்லை என ஏங்கிய ஷிவினுக்கு மற்ற போட்டியாளர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் அன்பு செலுத்திய விதம், பலரையும் மனம் உருக வைத்திருந்தது.

Advertisement

Advertisement