• May 04 2024

ஷில்பாவால் ஷாக்கான மாகாபா ஆனந்த்... என்ன வாய்ஸ்டா இது... விழுந்து விழுந்து சிரித்த பிரபலங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சி சேனல்கள் பலவற்றிலும் காலத்திற்கு காலம் பல்வேறு சீரியல்கள், மற்றும் நிகழ்ச்சிகள் எனப் புதிது புதிதாக உருவாகிய வண்ணம் தான் இருக்கின்றன. அதில் ஒரு சில சீரியல்களை மட்டும் மக்களால் என்றுமே மறக்க முடியாது.

அவ்வாறான சீரியல்களில் ஒன்று 'மௌன ராகம்'. இது பல ஆண்டுகளுக்கு முன் இரு குழந்தைகளை வைத்து ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. அதன்பின் சீரியலின் இரண்டாம் பாகமாக தற்போது சக்தி, சத்யா திருமண வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டதாக ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி முக்கியமான ஒரு ரோலில் நடித்து வருகிறார் ரவீனா தாஹா. அவருக்கு வில்லியாக சக்தி என்ற ரோலில் ஷில்பா என்ற குட்டி நட்சத்திரம் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் விஜே மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கும் 'அண் டா கா கசம்' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.


இந்த நிகழ்ச்சியில் ஷில்பா பேசும் போது அச்சு அசலாக குழந்தைகளுக்கு டப்பிங் கொடுக்கும் வாய்ஸ் போல் இருப்பதை கண்டு மாகாபா ஆனந்த் ஷாக்காகியுள்ளார். அதுமட்டுமல்லாது முகத்துக்கும் வாய்ஸ்க்கும் சம்பந்தமே இல்லாத அளவிற்கு ஷில்பாவின் பேச்சை அந்த நிகழ்வில் வைத்து பலரும் கலாய்த்து உள்ளார்கள். அத்தோடு அங்கிருந்த பலரும் விழுந்து விழுந்து சிரித்துள்ளனர்.


இந்த வீடியோ ஆனது தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement