• May 05 2024

குந்தவையாய் மாறிய பிக்பாஸ் பிரபலம்... அச்சு அசல் த்ரிஷா போலவே இருக்காங்களே... ஷாக்கான ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய திரைப்பட பெண் நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகை சனம் செட்டி. இவர் 2016 இல் 'மிஸ் தென்னிந்தியா' என்ற அழகிப் பட்டத்தைப் பெற்று சாதனை படைத்தவர்.

இந்தியத் திரைப்பட நடிகையாக இருந்தாலும் இவர் முதன்மையாக தமிழ் மற்றும் கன்னடப் படங்களில் தான் அதிகம் நடித்து வருகிறார். 


இவர் திரைப்படத் துறையில் தன்னுடைய பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் 'டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்' நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.


அதுமட்டுமல்லாது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 4 இன் போட்டியாளராகவும் கலந்து கொண்டிருந்தார்.


இவ்வாறாக திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எனப் பலவற்றின் வாயிலாக தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.

இந்நிலையில் நேற்றைய தினம் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தினருக்கு பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் இவர் ஒரு விடயத்தினை மேற்கொண்டிருக்கின்றார்.


அதாவது இப்படத்தில் எல்லோருக்கும் பிடித்த கதாபாத்திரம் என்றால் அது த்ரிஷா நடித்த குந்தவை என்ற கதாபாத்திரம் தான். அந்தவகையில் சனம் செட்டியும் குந்தவை போன்று வேடமணிந்து அச்சு அசல் த்ரிஷாவை போலவே காட்சி அளிக்கின்றார்.


அதனைப் புகைப்படமாக எடுத்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்திலும் பதிவேற்றி இருக்கின்றார். இப்புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகின்றன. 


Advertisement

Advertisement

Advertisement