• May 03 2024

''ஷாருக்கான் எனக்கான வசதியை கொடுத்தார்''.! ஜவான் பட ஷூட்டிங் அனுபவத்தை பகிர்ந்த விஜய் சேதுபதி

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி தற்போது ஹிந்தியில் ‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். அட்லீ இயக்கும் இப்படத்தில் ஷாருக்கான் நாயகனாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்கின்றனர்.



சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் குறித்து பேட்டி ஒன்றில் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார் சேதுபதி, ஆரம்பத்தில்  மிகவும் பதட்டமாக உணர்ந்தேன். ஆனால் ஷாருக்கான் எனக்கான வசதியை ஏற்படுத்தி தந்தார். அவருக்கு ஷூட்டிங் இல்லையென்றாலும், என்னுடன் இருப்பார். அவருடனான அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது என்று நெகிழ்ச்சியடைந்து கூறியுள்ளார்.



மேலும் ,நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தின் போது, ஷாருக்கானை முதன்முதலில் சந்தித்து அவரிடம் பேசியதாகவும் அப்போது தான் ஷாருக்கானுடன் நெகட்டிவ் ரோலில் நடிக்க விரும்புகிறேன் என்று கூறினேன். இதன் பின், படக்குழு தன்னை அழைத்து படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டதாக கூறினார்.



அட்லீ இயக்கத்தில் ஐந்து மொழிகளில் வெளியாகும் ‘ஜவான்’ திரைப்படத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், சன்யா மல்ஹோத்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement