• Apr 20 2024

ஸ்டைலிஷ் உடையணிந்து... வேற லெவலில் போட்டோ ஷூட் நடத்திய ஸ்ருதிஹாசன்.. லேட்டஸ் கிளிக்ஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். கமல் ஹாசனின் மகளாகிய இவர் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி, கடந்த 2009-ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தின் மூலம் இசையமைப்பாளரானார். 


அதன்பின்பு தன்னுடைய முழு கவனத்தையும் நடிப்பில் செலுத்த தொடங்கினார். அந்தவகையில் சமீபகாலமாக இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தெலுங்கு மொழியில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.


அதாவது இந்த பொங்கல் பண்டிகைக்கு தெலுங்கில் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணா நடித்த வீர சிம்ஹா ரெட்டி ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகின. இந்த இரண்டும் படங்களிலுமே ஹீரோயினாக நடித்திருந்தார். இரு படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் தற்போது டபுள் சந்தோஷத்தில் உள்ளார் ஸ்ருதிஹாசன். 


இவ்வாறு படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், போட்டோஷூட் நடத்துவதையும் தன்னுடைய வழக்கமாக வைத்துள்ளார் ஸ்ருதி. அந்த வகையில் தற்போதும் ஸ்டைலிஷ் உடையணிந்து அவர் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவை ஆக்கிரமித்து உள்ளன.


Advertisement

Advertisement

Advertisement