• Jan 18 2025

காதலியைக் கரம்பிடித்த வானத்தைப் போல சீரியல் ராஜபாண்டி- வெளியாகிய வெடிங் போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

சென்னையில் பிறந்து வளர்ந்த அஸ்வின் கார்த்திக், கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போதே, சீரியல்களில் நடிக்க வாய்ப்பு தேடியவர். பின்னர் இயக்குநர் பென்னட் இயக்கத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதை தொடர்ந்து, பிரியமானவள், குல தெய்வம், கல்யாணம் முதல் காதல் வரை, றெக்க கட்டி பறக்குது மனசு, அரண்மனை கிளி போன்ற சீரியல்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 


மேலும் தற்போது சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரான 'வானத்தை போல' சீரியலில் ராஜ பாண்டி என்கிற ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அஸ்வின் கார்த்திக் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாகவே, மேக்அப் ஆர்ட்டிஸ்ட் காயத்திரி என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரின் காதலுக்கும், அவர்களின் பெற்றோர் பச்சை கொடி காட்டிய நிலையில் அண்மையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.


இந்த நிலையில் இன்றைய தினம் இவருக்கு திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement