• Mar 11 2026

காதலியாக நடித்தவர் அக்காவாக.. சன் டிவி ‘லட்சுமி’ ஹீரோ சஞ்சீவ் தர்மசங்கடம்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கிய ‘லட்சுமி’ என்ற சீரியல் தற்போது தான் பரபரப்பான கட்டத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் நாயகனாக நடித்து வரும் சஞ்சீவ் அக்காவாக நடிக்கும் நடிகை ஏற்கனவே அவருடைய காதலியாக நடித்திருந்ததை அடுத்து படப்பிடிப்பின் போது தர்ம சங்கடம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஒரு காலத்தில் ஜோடியாக நடித்த நடிகருக்கு அதே நடிகை பின்னாளில் அக்கா, தங்கை, ஏன் அம்மாவாக கூட நடிக்கும் நிலை ஏற்படும் என்பதை பல சினிமாவில் நிறைய பார்த்திருப்போம். அந்த வகையில் ’திருமதி செல்வம்’ என்ற தொடரில் சஞ்சீவை ஒருதலையாக காதலிக்கும் கேரக்டரில் நடித்தவர் ரிந்தியா. இந்த தொடரில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கும் என்று அப்போதே பல கமெண்ட்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘லட்சுமி’ சீரியலில் சஞ்சீவி ஜோடியாக ஸ்ருதி ராஜ் நடித்து வரும் நிலையில் இந்த சீரியலில் சஞ்சீவிக்கு மூத்த சகோதரியாக ரிந்தியா நடித்து வருகிறார்

இருவரும் சமீபத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது ’திருமதி செல்வம்’ சீரியலில் ஜோடியாக நடித்ததை நினைவுபடுத்தி கொண்டதாகவும், ஒருதலையாக காதலித்த நடிகருக்கு அக்காவாக நடிப்பது  தனக்கு தர்ம சங்கடமாக இருக்கிறது என்று ரிந்தியா காமெடியாக பேசி கொண்டதாகவும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement