• May 04 2024

வசூலில் அள்ளிக்குவிக்கும் சீதா ராமம் திரைப்படம்- கேக் வெட்டி வெற்றியைக் கொண்டாடிய படக்குழு

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சீதா ராமம்'. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். இந்தப்படம் கடந்த வாரம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகிவுள்ளது.

ராஷ்மிகா மந்தனா, கெளதம் மேனன், சுமந்த் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்வப்னா சினிமா தயாரித்துள்ள இந்தப் படத்தை வைஜெயந்தி மூவிஸ் வெளியிட்டுள்ளது. விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

1964ம் ஆண்டு நடப்பது போல் உருவாக்கப்பட்ட இப்படமானது உறவுக்கு யாரும் இல்லாத ராம் என்ற ராணுவ வீரரின் வாழ்க்கையே எடுத்துக் காட்டுகின்றது. இப்படம் படம் வெளியாகி 5 தினங்களாகி உள்ள நிலையில், 33 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சீதா ராமம் படத்தின் வெற்றியை படக்குழு ஷ கேக் வெட்டி கொண்டாடி உள்ளது. இதில், துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோர் கலந்து கொண்டு கேக் வெட்டிக் கொண்டாடினர்.அனைத்து மொழி ரசிகர்களும், சீதா ராமம் படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement