• May 04 2024

சூர்யா 42 படத்தில் சீதா ராமம் ஹீரோயின் நடிக்கிறாங்களாம்- அதுவும் என்ன கதாப்பாத்திரத்தில் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் சிவா கார்த்தியின் சிறுத்தை படத்தை இயக்கியதில் இருந்தே சிறுத்தை சிவா என்றே இன்னமும் அழைக்கப்பட்டு வருகிறார். நடிகர் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என 4 படங்களை இயக்கியவர் சிறுத்தை சிவா. தற்பொழுது சூர்யா 42 படத்தை இயக்கி வருகிறார்.

பிரம்மாண்டமாக உருவாகி வரும் சூர்யா 42 படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பை படு வேகமாக நடந்து வருவதோடு படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யயவும் படக்கழு திட்டமிட்டுள்ளதாம்.


ஏற்கனவே இப்படம் 50% சதவீதத்திற்கும் மேல் படப்பிடிப்பு நடந்துவிட்ட நிலையில் அடுத்ததாக வரலாற்று காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம்.இந்நிலையில், வரலாற்று பகுதியில் இடம்பெறும் காட்சிகளில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க வளர்ந்து வரும் இளம் சென்சேஷன் நடிகை மிருணாள் தாகூர் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு வெளிவந்த சீதா ராமம் படத்தின் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர் அடுத்ததாக யாருடன் இணையப்போகிறார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.இந்த சமயத்தில் சூர்யாவுடன் இவர் ஜோடியாக நடிக்கவிருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது


துல்கர் சல்மானுக்கு ஜோடியாக சீதா ராமம் படத்தில் தனது 100 சதவீத பெஸ்ட் பர்ஃபார்மன்ஸை நடிகை மிருணாள் தாகூர் கொடுத்திருப்பார். ராணி கதாபாத்திரத்திற்கு அவர் கச்சிதமாக பொருந்துவார் என்பதால் சூர்யா 42 படத்தில் அவரை இறக்குமதி செய்துள்ளார் இயக்குநர் சிறுத்தை சிவா என்று கூறுகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement