• Apr 20 2024

வாரிசு படத்தின் ஜிமிக்கி ஜிமிக்கி ஜிமிக்கி பொண்ணு பாடலின் வீடியோ ரிலீஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


குடும்பக் கதையை மையப்படுத்தி இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாக்கப்பட்ட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த திரைப்படம் தான் வாரிசு. இப்படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், சதீஷ், பிரபு, ஜெயசுதா, ஷாம், யோகி பாபு, சங்கீதா, நந்தினி, விடிவி கணேஷ், ஸ்ரீமன், சுமன், கணேஷ் வெங்கட்ராமன் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர்.

பொங்கலுக்கு வந்தப் படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் வரவேற்பு பெற்று வசூல் அள்ளியது. இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வாரிசு வெளியான 16 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.193.94 கோடியும், வெளிநாடுகளில் 10.01 மில்லியன் டாலர்களும் உலகம் முழுவதும் மொத்தமாக ரூ.275.69 கோடியும் வசூல் அள்ளியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 கூடிய விரைவில் ரூ.300 கோடி வசூல் கொடுத்த படங்களின் பட்டியலில் வாரிசு படமும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வாரிசு படம் மட்டுமின்றி படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களும் ரசிகர்களிடையே ஏக போக வரவேற்பு பெற்றது. ரஞ்சிதமே என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் பரவி வைரலாகி வருகிறது.

 இந்த நிலையில், படத்தில் இடம் பெற்றுள்ள மற்றொரு பாடலான ஜிமிக்கி பொண்ணு என்ற பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதன் காரணமாக டுவிட்டரில் ஜிமிக்கி பொண்ணு (#JimikkiPonnu) என்ற பாடலின் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 



Advertisement

Advertisement

Advertisement