தமிழ் திரையுலகில் நடிகராக மட்டுமல்ல, அவரது மனிதநேயம் மற்றும் சென்சிட்டிவிட்டி என்பன மூலம் பிரபலமாக உள்ள நடிகர் சரத்குமார், சமீபத்தில் தனது தாயாரின் நினைவுகளைப் பற்றிய நெகிழ்ச்சியான அனுபவத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் பேட்டியளித்த போது, சரத்குமார் கூறிய விஷயம் தற்பொழுது வைரலாகி வருகின்றது. அதன்போது அவர், "என் வீட்டிலேயே எனக்கு மிகவும் பிடித்த அறை இது தான். என் தாயார் கடைசி வரை இருந்த அறை இதுதான்.
அவங்க நினைவாக அவங்க போட்டிருந்த செயின், வளையல், கண்ணாடி எல்லாத்தையும் பிரேம் பண்ணி வைச்சிட்டேன். இந்தக் கண்ணாடியை பார்க்கும் போதெல்லாம் எங்க அம்மா என்னைப் பார்க்கிற மாதிரி இருக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வார்த்தைகளில் இருந்து, சரத்குமார் தாயாரின் மேல் உள்ள ஆழமான அன்பை வெளிப்படுத்தியுள்ளார். திரையுலகில் பல வருடங்கள் போராடி முன்னேறிய சரத்குமார், தனக்கான புகழையும், வெற்றியையும் அடைந்தாலும், குடும்பத்தினரின் நினைவுகள் அவருக்கு எப்போதும் முதன்மை என்கிற உணர்வை அவர் இந்த பேட்டியின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார்.
Listen News!