• May 04 2024

முதன் முறையாக தன்னுடைய மகளின் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து சொன்ன சமுத்திரகனி- இது தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


 தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு பிரபலமாக இருப்பவர் தான் சமுத்திரக்கனி. இவர் ஆரம்பத்திலுந்து தற்பொழுது வரை நடித்து வரும் கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களைக் கவர்ந்ததாகவே உள்ளது.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.தமிழில் 2003ம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் திரைப்படத்திற்கு கதையாசிரியராக பணியாற்றி திரைத்துறையில் அறிமுகமானார்.


அதன்பின் அவரது பயணம் நடிகர், இயக்குநர், கதையாசிரியர் என தனது பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறார். கடைசியாக தெலுங்கில் வெளியாகி இருந்த தசரா படத்தில் நடித்திருந்தார்.

 சமுத்திரக்கனி இப்போது ஷங்கர்-கமல் கூட்டணியில் தயாராகும் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.தனது குடும்பத்தை சினிமா பக்கமே காட்டாமல் இருக்கும் சமுத்திரக்கனி முதன்முறையாக தனது மகளின் சிறுவயது புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.இந்தப் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement