• Jan 19 2025

பூக்களின் வாசனையால் எமர்ஜென்சி சிகிச்சைப் பிரிவில் இருந்த சமந்தா- அவரே பதிவிட்ட அதிர்ச்சிப் பதிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸி நடிகையாக இருக்கிறார். கமர்ஷியல் படங்களில் முதலில் அதிகமாக நடித்து வந்த சமந்தாவுக்கு பெரிய வரவேற்பு இருந்தது. பெரிய நாயகர்களுடன் ஜோடியாக நடித்து ஹிட் லிஸ்ட்டில் இருந்தார்.

2017ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை இருமத முறைப்படி திருமணம் செய்து கொண்டார். அட க்யூட் ஜோடிங்க எல்லாரும் லைக்ஸ் தட்டினர். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை மூன்று வருடம் கூட தாக்குப்பிடிக்கவில்லை. 2021ம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர்.


இதற்கு காரணமாக திருமணத்துக்கு பின்னர் புஷ்பா படத்தில் ஊ சொல்றீயா பாடல்களுக்கு போட்ட கெட்ட ஆட்டமும், ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் அம்மணி ரொம்பவே ஓபனாக நடித்ததும் காரணமாக சொல்லப்பட்டது. இருந்தும் தொடர்ந்து சமந்தா சினிமாவில் நடித்து வருகிறார்.

திடீரென யசோதா படம் சமயத்தில் தனக்கு மியோசிட்டஸ் வியாதி இருப்பதாக கூற ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அத்தோடு தொடர்ந்து அந்த வியாதிக்காக சிகிச்சை பெற்றும் வருகின்றார்.சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் சமந்தா நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவினைப் போட்டுள்ளார்.


அதில் கேப்ஷனாக பூக்கள் பார்க்க அழகாக இருந்தாலும் அதனால் தனக்கு அலர்ஜி வந்து முன்பு எமர்ஜென்சி சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டேன் என கூறி இருக்கிறார்.மேலும் பூக்களுக்கு பக்கத்தில் இருந்தாலும் நோய் வருமா என ரசிகர்கள் ஆச்சரியமாகக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement