நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் 'மா இண்டி பங்காரம்' திரைப்பட விழாவில் பேசிய கருத்து சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. வாழ்க்கை, உறவுகள் மற்றும் தொழில் முன்னேற்றம் குறித்து அவர் பகிர்ந்த எண்ணங்கள் பலரிடமும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
அந்த நிகழ்ச்சியில் பேசிய சமந்தா, “உறவுகள் மிகவும் சிக்கலானவை. அவை ஒருவரின் கட்டுப்பாட்டில் மட்டும் இருக்காது. ஒரு நல்ல உறவை உருவாக்கவும், அதை நீண்ட காலம் நிலைநிறுத்தவும் இருவரின் முயற்சியும் அவசியம். ஆனால் Career என்பது நம் கையில் இருக்கும் ஒன்று. நம் திறமை, உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் அதை வளர்த்துக் கொள்ள முடியும்.” என்று கூறினார்.

மேலும், “உங்கள் வெற்றியைக் கண்டு உண்மையாக மகிழ்ச்சியடையும், உங்கள் வளர்ச்சியைப் பார்த்து பெருமைப்படும் நபரையே வாழ்க்கைத்துணையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு உறவில் பரஸ்பர மரியாதை, ஆதரவு மற்றும் ஊக்கம் மிகவும் முக்கியம்.” என்றும் அவர் தெரிவித்தார்.
சமந்தாவின் இந்த கருத்து குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வாழ்க்கையில் தனிப்பட்ட மகிழ்ச்சிக்கும் தொழில் முன்னேற்றத்திற்கும் இடையிலான சமநிலையைப் பற்றி அவர் கூறிய இந்த கருத்துகள் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அவரது பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Listen News!