• Dec 07 2022

நடக்க முடியாமல் அவதிப்படும் சமந்தா- அவரின் உடல் நிலை குறித்து முக்கிய பிரபலம் கொடுத்த ரகசியத் தகவல்

Listen News!
stella / 1 week ago
image
Listen News!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. இவர் தமிழ் ,தெலுங்கு ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

மேலும் இவரது நடிப்பில் இறுதியாக யசோதா என்னும் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.இப்படம் வெளியாவதற்கு முதல் தான் அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தற்பொழுது அதிலிருந்து குணமடைந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.


இதனால் இவரது ரசிகர்கள் கடும் சோகத்திற்குள் உள்ளாகியிருந்தனர்.இந்த நிலையில் நேற்றைய தினம் சமந்தா உடல்நிலைப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.


ஆனால் அவர் வீட்டில் நலமுடன் ஒய்வெடுத்து வருதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது சமந்தாவின் உடல்நிலை நடக்க முடியாத அளவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவரால் சிறிது தூரம் கூட நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக மூத்த பத்திரிக்கையாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இந்த தகவல் ரசிகர்களிடையே வேகமாக பரவி வருவதைக் காணலாம்.