• Apr 23 2024

துணிவு போஸ்டருடன் சபரி மலைக்குச் சென்ற அஜித் ரசிகர்கள்- அடடே இப்படி ஒரு லஃவ்வா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென அதிக ரசிகர்களை கொண்ட முன்னணி நடிகர்களின் ஒருவரான அஜித்,வருக்கு உலக அளவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். எனவே இவர், எந்த தகவலை வெளியிட்டாலும் அதனை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இது தவிர தற்பொழுது துணிவு என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படத்தின் ரிலீஸிற்காக ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.


மேலும் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சுவாரியார் நடித்து வருகின்றார்.அத்தோடு  படத்தின் அப்டேட் கொடுங்கள் என ரசிகர்கள் தொடர்ந்து படக்குழுவினரிடம கேட்டு வருகின்றனர்.

அஜித் ரசிகர்கள் சிலர் தற்போது இருமுடியுடன் சபரிமலைக்கு சென்று இருக்கிறார்கள். அங்கு அவர்கள் துணிவு பட போஸ்ட்டர் உடன் கொடுத்திருக்கும் போஸ் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.அஜித்துக்கு இப்படியும் ரசிகர்களா என எல்லோரும் ஆச்சரியம் அடைந்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement