• May 04 2024

வெளியாகி 11மணி நேரத்திற்குள்... 31மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்த 'சலார்' டீசர்..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, பிரசாந்த் நீல் இயக்கத்தில் தற்போது 'சலார்' திரைப்படம் உருவாகி வருகின்றது. கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் இப்படத்தையும் பிரமாண்டமாக தயாரிக்கிறது. 


அதுமட்டுமல்லாது இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடிக்கிறார். மேலும் இப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் 'சலார்' படத்தின் டீசர் இன்று காலை 5.12 மணிக்கு மாஸாக வெளியாகி இருந்தது. இந்த டீசர் வெளியாகி 11 மணி நேரத்திற்க்குள் யூடியூப்பில் 31மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement