• May 18 2024

13 வருடங்களுக்கு பிறகு விடாமுயற்சியில் அஜித் செய்யப்போகும் தரமான சம்பவம்.. வெளியான சூப்பர் அப்டேட்..!

Jo / 10 months ago

Advertisement

Listen News!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு படம் வெற்றி பெற்றது. இதனையடுத்து தனது 62ஆவது படத்தில் நடிக்கிறார் அஜித்குமார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அஜித் தனது 62ஆவது படத்தையும் ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்பதில் அஜித் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

 இதனை அஜித்குமார் மகிழ் திருமேனியிடமும் கூறியதாகவும் அதனையொட்டிதான் கதையை உருவாக்குவதற்கு அவர் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டதாக தெரிகிறது. அதேசமயம் படத்தின் பெயரான விடாமுயற்சிக்கு ரசிகர்களில் ஒரு தரப்பினர் விமர்சனத்தை முன்வைக்க, மகிழ் திருமேனியின் கதையும், மேக்கிங்கும் அட்டகாசமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அஜித் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் விடாமுயற்சி படம் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது. 

அஜித் இதுவரை இரட்டை வேடங்களில் நடித்ததில் அசல் படத்தை தவிர்த்து மற்ற படங்கள் ஹிட்டாகியிருப்பதாலும், மகிழ் திருமேனி தடம் என்ற படத்தில் அருண் விஜய்யை இரட்டை வேடத்தில் அருமையாக காட்சிப்படுத்தியிருந்ததால் இந்தப் படத்திலும் ஏதேனும் ஒரு வித்தியாசம் இருக்கும் எனவும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Advertisement

Advertisement