தமிழ் சினிமாவில் நடிகைகள் சம்பள உயர்வில் தற்பொழுது மாபெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை நயன்தாரா மற்றும் த்ரிஷா மட்டுமே அதிகளவு சம்பளம் பெறும் நடிகைகளாக இருந்தனர். ஆனால் சமீபத்தில் வெளியான தகவலின் படி 2025ம் ஆண்டு சில முன்னணி நடிகைகள் அவர்களை விட அதிகமான சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளியான தகவலின்படி சாய் பல்லவி 2024 வரை ஒரு படத்திற்கும் ரூ. 5 கோடி மட்டுமே சம்பளம் பெற்றிருந்தார். ஆனால், ‘அமரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது சம்பளத்தை பெருமளவில் உயர்த்தியுள்ளார். தற்போது, பாலிவுட்டில் ‘ராமாயணம்’ படத்தில் நடிக்கும் அவர் 20 கோடி வரை சம்பளம் பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், இந்திய சினிமாவின் அதிக சம்பளம் பெறும் நடிகையாக முன்னணியில் இருக்கிறார்.
நயன்தாரா, தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் தொடர்ந்து மாபெரும் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். தற்போது, சுந்தர்.சி இயக்கத்தில் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நடிக்கும் அவர் ரூ. 15 கோடி சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம், அதிக சம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் காணப்படுகிறார்.
புஷ்பா 2 படத்தின் பெரும் வெற்றிக்குப் பின் ராஷ்மிகா தனது சம்பளத்தை அதிகரித்துள்ளார். தற்போது, பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் உடன் ‘சிக்கந்தர்’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்காக ரூ. 13 கோடி சம்பளம் பெற்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதன் அடிப்படையில் 2025ல் சாய் பல்லவியின் சம்பள உயர்வு நயன்தாராவை விட வேகமான வளர்ச்சி அடைந்துள்ளது என்றே கூறலாம்.
Listen News!