• May 04 2024

புஷ்பா 2வில் சாய்பல்லவியா..? கதாபாத்திரம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த சில மாதங்களிற்கு முன்  இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் புஷ்பா. இப்டம் பான் இந்திய அளவில் ரிலீஸ் ஆகி வசூல் வேட்டை நடத்தியிருந்தது.

சந்தன மக்கட்டை கடத்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்ததோடு பஃகத் பாசில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அத்தோடு சமந்தா இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அசத்தியிருந்தார்.



 தெலுங்கு மொழியில் உருவான இந்த படம் தமிழ், கன்னட ,மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. 

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம்  உருவாகி வருகிறது. முன்னதாக கேஜிஎப் 2 படத்தை பார்த்த பின்னர் புஷ்பா 2வை பிரமாண்டமாக எடுக்க எண்ணிய  இயக்குநர் சுகுமார் சற்று காலதாமதம் செய்திருந்தார். 



எனினும் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இதில் விஜய் சேதுபதி இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதா கூறப்பட்டது என தகவல் பரவி வருகிறது.மேலும்  இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் புஷ்பா 2வில் சாய்பல்லவி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் பழங்குடியின பெண்ணாக அவர் நடிப்பார் எனவும் தகவல் கசிந்துள்ளது.அத்தோடு இப் படத்தின் கதையில் அவரது கதாபாத்திரம் மிக முக்கியம் வாய்ந்ததாகவும் இருக்குமாம். விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement