சின்னத்திரையில் விஜய் டிவியும், சன் டிவியும் புதிய புதிய சீரியல்களை போட்டி போட்டு ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் டிஆர்பி யில் உச்சம் தொட்ட சீரியல்களை நான்கு ஐந்து ஆண்டுகள் வரை வைத்து இழுக்கும் சேனல்கள், அதில் சரிவை கண்ட சீரியல்களை சட்டென முடிவுக்கு கொண்டு வந்து விடுகின்றனர்.
விஜய் டிவியில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட சீரியல் தான் பனிவிழும் மலர்வனம். இந்த சீரியல் அண்ணன் - தங்கை மற்றும் அக்கா -தம்பி ஆகிய நான்கு பேருக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சீரியலில் பாரதி கண்ணம்மா சீரியல் புகழும் பிக் பாஸ் புகழும் ஆன வினுஜா நடித்துள்ளதோடு அவருடன் ஈரமான ரோஜாவே தொடரின் நாயகனாக நடித்த சித்தாத் குமரனும் நடித்துள்ளார். இவர்களுடன் ரயானும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் கலந்து கொண்ட ரயான் பனிவிழும் மலர்வனம் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த தகவல் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றதோடு அவருக்கு பதிலாக நடிக்க உள்ள பிரபலம் பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளது.
Listen News!