சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், அண்ணாமலை, முத்துவையும் மீனாவையும் கடுமையாக திட்டுகிறார். அதே நேரத்தில், ரோகிணி எந்த எல்லைக்கும் செல்வார், போலீஸில் புகார் கொடுக்கவும் தயங்க மாட்டார் என்று கூறுகிறார்.
அச்சமயம் எதிர்பாராத விதமாக போலீசார் வீட்டிற்கு வந்து, ரோகிணி அளித்த புகாரின் அடிப்படையில் முத்துவையும் மீனாவையும் விசாரணைக்காக அழைத்துச் செல்கின்றனர்.
போலீஸ் நிலையத்தில், முத்துவும் மீனாவும் தன்னை அடித்ததாக பொய் புகார் அளிக்கிறார் ரோகிணி. இதைக்கேட்டு மீனா அதிர்ச்சி அடைகிறார். ஆனாலும் அந்த இடத்தில் ரோகிணிக்கு நான்கு அடியும் போடுகிறார்.
அப்போது, அங்கிருந்த பெண் கான்ஸ்டபிளின் மகனுக்கு உணவு தொண்டையில் சிக்கி திடீர் என வலிப்பு ஏற்படுகிறது. இதை கவனித்த மீனாவும் முத்துவும் உடனடியாக உதவி செய்து குழந்தையை காப்பாற்றுகின்றனர்.
இதனால் பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரி, முத்துவிடம் நடந்த உண்மையை கேட்கிறார்.

அப்போது முத்து, ரோகிணி ஏற்கனவே திருமணமானவர், அவருக்கு ஒரு மகனும் உள்ளார். இந்த உண்மையை மறைத்தே என் அண்ணனை திருமணம் செய்தார். அதனால் தான் என் அம்மா அவரை வீட்டைவிட்டு வெளியேற்றினார் என்று உண்மையை வெளிப்படுத்துகிறார்.
இதைக் கேட்ட போலீசார், “இது பிராட் திருமணமா?” என ரோகிணியை கண்டிக்கிறார்கள். ஆனால் ரோகிணி மீண்டும், தன்னை கடத்தி அடித்ததாக பொய் சொல்லுகிறார்.
அந்த நேரத்தில் அருண் அங்கு வந்து, ரோகிணி கூறுவது அனைத்தும் பொய் என்று முத்து–மீனாவுக்கு ஆதரவாக சாட்சி அளிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, ரோகிணி மீது கேஸ் பதிவு செய்ய போலீசார் முடிவு செய்கிறார்கள். ஆனால் முத்து–மீனா டைவர்ஸுக்கு அப்ளை செய்திருப்பதால், அது முடியும் வரை ரோகிணியை விட்டுவிடுமாறு அறிவுறுத்துகின்றனர்
இதற்கு பின், சிந்தாமணியின் கைப்பாவையான கந்து வட்டிக்காரர், விஜயாவின் வீட்டிற்கு வந்து, 'வீட்டுக் கடனை நான் அடைக்கிறேன், வீட்டுப் பத்திரத்தை கொடுங்கள்' என்று கேட்கிறார்.
இதற்கு முத்துவும் அண்ணாமலையும் கடுமையாக மறுப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் விஜயா' இந்த கடனை எல்லாம் நீ கார் ஓட்டி கட்ட 50 வருஷம் ஆகும்' என்று முத்துவை அவமானப்படுத்துகிறார்.
Listen News!