• Apr 21 2026

ஜோ படத்தைப் போல எதிர்பார்க்கப்படும் ரியோவின் அடுத்த பட அப்டேட்..!

shali / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்தியாவில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து பின்னர் திரைப்படங்களில் நடித்து நடிகராக திகழ்பவரே ரியோராஜ். இவர் 2019ம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் இயக்கிய 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா'  என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து "பிளான் பண்ணி பண்ணனும் " மற்றும்" ஜோ" போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துக் கொண்டார். ஜோ படமானது ரியோவின் வாழ்கையில் திருப்புமுனையாக அமைந்து கொண்டது என்றே கூறலாம் . அந்த அளவிற்கு மக்கள் அனைவரும் அந்தப் படத்தினை வரவேற்று கொண்டாடினார்கள்.


தற்பொழுதும் ரியோ ஸ்வீட் ஹார்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். அந்தப் படத்தை நாளைய தினம் வெளியிட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்தப் படமும் ஜோ படத்தைப் போல மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement